neer ennaik kankinra thevan

நீர் என்னைக் காண்கின்ற

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீர் என்னைக் காண்கின்ற தேவன்
உம்மில் நான் மகிழ்ச்சியாய் இருப்பேன்
துன்பத்தின் நேரத்தில் எல்லாம்
உம் இன்பம் போதுமே நாதா- (2)
வியாதியின் நேரத்தில் எல்லாம்
விடுதலை தருவீரே நாதா (2)
பெலவீன நேரத்தில் எல்லாம்
பெலத்தால் தாங்குவீர் நாதா (2)
அல்லேலூயா (4)
அல்லேலூயா அல்லேலூயா (4)
கூப்பிடும் நேரத்தில் எல்லாம்
குரல்தனை கேட்டீரே நாதா (2)
ஆவியின் அபிஷேகம் ஈந்து
அனல் மூட்டி எழுப்பிடும் நாதா (2)
அல்லேலூயா அல்லேலூயா (4)
சோர்ந்த நேரத்தில் எல்லாம்
சோர்வுகள் மாற்றினீர் நாதா (2)
கண்ணீரின் பாதையில் எல்லாம்
ஆறுதல் தருவீரே நாதா (2)
-அல்லேலூயா அல்லேலூயா (4)