neer en ketakamum ataikalam

நீர் என் கேடகமும் அடைகலம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீர் என் கேடகமும் அடைகலம்
துன்ப நேரத்தில் உறைவிடம்
கர்த்தர் பட்சத்தில் பயப்படேன்
வலகரம் என்னோடு இருப்பதால்
துதித்திடுவேன் நான் துதித்திடுவேன் நான்
முழுமனதாய் துதித்திடுவேன் நான்
புலம்பலை களிப்பாக மாற்றி விட்டீரே
முழுமனதாய் துதித்திடுவேன் நான்
1.புள்ளுள்ள இடங்களில் நடத்தினிர்
கோணலை நேராக மாற்றினீர்
கிருபையை நம்பியே வாழ்கிறேன்
நன்மை செய்து உம்மை பாடுவேன் – துதித்திடுவேன்
2.எல்லாம் முடிந்ததென்ற நேரத்தில்
உந்தன் வார்த்தையை அனுப்பினிர்
கோலும் தடியும் என்னை தேற்றுதே
வார்த்தை வழி நடத்தி சென்றதே – துதித்திடுவேன்
3.பார்வோன் மேற்கொள்ள வந்தாலும்
யோர்தான் கரைபுரண்டு சென்றாலும்
சேனைகளின் கர்த்தர் என்னோடு
கானானுக்குள் என்னை நடத்தினிர் – துதித்திடுவேன்
நீர் என் கேடகமும் அடைகலம் பாடல் வரிகள், Neer En Kedagam Adaikalam Lyrics