neengka vangka seekkiram vangka

நீங்க வாங்க சீக்கிரம் வாங்க

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீங்க வாங்க சீக்கிரம் வாங்க
உங்க ராஜ்யத்தை எதிர்பார்க்கிறோம் நாங்க-2
1.அநியாயம் அதிகமாச்சே
நியாயம் நீதி தொலைஞ்சுபோச்சே
வியாதி வறுமை பெருகிபோச்சே
அன்பும் காணாமபோச்சே -2
நீங்க வந்ததான் ஒரு முடிவு வரும்
ஏங்க வந்ததான் நல்லா விடிவு வரும் -2
வாங்க சீக்கிரம் வாங்க
உங்க ராஜ்யத்தை எதிர்பார்க்கிறோம் நாங்க – இயேசுவே
2.கடவுள் பயம் குறைஞ்சுபோச்சே
மனசாட்சியும் மறைஞ்சுபோச்சே
இதயம் முழுதும் இருண்டுபோச்சே
இல்லம் இல்லாமப்போச்சே -2
நீங்க வந்ததான் மறுவாழ்வு வரும்
நீங்க வந்ததான் திருவாழ்வு வரும் -2
இயேசுவே வாங்க சீக்கிரம் வாங்க
உங்க ராஜ்யத்தை எதிர்பார்க்கிறோம் நாங்க -2
வறுமை ஒழியனும்
வாழ்வு நிறைவாய் வேண்டும்
வியாதி ஒழியனும்
வையம் நலம் பெறவேண்டும்
சண்டை மறையனும்
நிம்மதி மலர்த்திடவேண்டும்
தீமை ஒழியனும்
நன்மை நதியாய் ஓடணும்
பாவம் ஒழியனும்
நீதி நிலைத்திட வேண்டும்
மரணம் மடியனும்
ஜீவன் நிரந்தம் வேண்டும்
நீங்க வாங்க சீக்கிரம் வாங்க பாடல் வரிகள், Neenga vaanga seekkiram vaanga lyrics