neengka enakku sonna varththai

நீங்க எனக்கு சொன்ன வார்த்தை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீங்க எனக்கு சொன்ன வார்த்தை
என் நெஞ்சுக்குள்ள இருக்கு நெஞ்சுக்குள்ள இருக்கு
நீங்க எனக்கு செஞ்ச உதவி
என் கண்ணுக்குள்ள இருக்கு கண்ணுக்குள்ள இருக்கு ஏசப்பா
உங்க மனசு போல ஒரு மனசு இங்க யாருக்கு இருக்கு
உங்க அன்பு போல ஒரு அன்பு இங்க யாருக்கு இருக்கு
என் கண்ணுக்குள்ள இருக்கு என் நெஞ்சுக்குள்ள இருக்கு ஏசப்பா
1.விழுந்து கிடந்த என்னையும் தூக்கினது நீங்க தான்
விழாமலே இன்னமும் காப்பதும் நீங்க தான்
வார்த்தையால சொன்னதை கரங்களால செஞ்சீங்க அப்பா
என் வாழ்க்கையில உங்க சித்தம் செய்திடுவேன் அப்பா
நீங்க எனக்கு சொன்ன வார்த்தை
என் நெஞ்சுக்குள்ள இருக்கு நெஞ்சுக்குள்ள இருக்கு
நீங்க எனக்கு செஞ்ச உதவி
என் கண்ணுக்குள்ள இருக்கு கண்ணுக்குள்ள இருக்கு ஏசப்பா
2.எதிர்காலம் தெரியாமல் இருந்து கிடந்த வாழ்க்கையில்
ஒளி ஏற்றி வைத்து உயர்த்தியதும் நீங்க தான்
முகவரியே இல்லாம பூமியில வாழ்ந்தேன் அப்பா
உங்க சமூகத்தை என் முகவரியாய் மாற்றினீங்க அப்பா