neenga ninaikkama ondrum

நீங்க நினைக்காம ஒன்றும் வாழ்வில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீங்க நினைக்காம ஒன்றும் வாழ்வில் நடக்காது
நீங்க குறிக்காம என்னால் வாழ முடியாது
1. எளியவன் என்னை குப்பையில் எடுத்து
பிரபுக்களோடு அமர செய்தீர் - 2
நான் இனி தரித்திரன் ஆவதில்லை
ஆசீர்வாதம் என்றும் குறைவதில்லை -2
2. என் தலை எண்ணெயால் அபிஷேகித்து
பாத்திரம் நிரம்பி வழியச் செய்தீர்
சந்தோஷ வாழ்வை எனக்கு தந்து
இதுவரை என்னை நடத்தி வந்தீர்
3. வியாதி நேரத்தில் பெலனைத் தந்து
ஆயுசு நாட்களை கூட்டித் தந்தீர்
வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்
கீழாக்காமல் என்னை மேலாக்கினீர்