nee saynthu thoongku pillaiye – Nee Saainthu Thoongu Pillaiyae

நீ சாய்ந்து தூங்கு பிள்ளையே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீ சாய்ந்து தூங்கு பிள்ளையே – Nee Saainthu Thoongu Pillaiyae
1.நீ சாய்ந்து தூங்கு பிள்ளையே,
கண் மூடு, கண்ணே; நீ
அஞ்சாதே, மோசம் இல்லையே
கர்த்தாவின் கண் மணி.
2.பிதா தாமே உன் பக்கத்தில்
துணையாய் நிற்கிறார்;
அவரே உன்னைக் காக்கையில்
பொல்லாங்கு செய்வதார்?
3.குமாரன் கெட்டுப் போனதை
ரட்சிக்கவே வந்தார்;
உனக்குச் சுவிகாரத்தை
அளிக்க மரித்தார்.
4.தேவாவி உன்னில் தங்குவார்
உன்னை நடத்துவார்;
எந்நாளும் உன்னைத் தாங்குவார்
பேரின்பம் அளிப்பார்.
5.நீ சாய்ந்து தூங்கு, பிள்ளையே,
கண் மூடு, கண்ணே; நீ
அஞ்சாதே, மோசம் இல்லையே,
கர்த்தாவின் கண் மணி.