nechayamaga naan unnai asirvathithu

நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீச்சயமாக நான் உன்னை
ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன்
நிச்சயமாக நான் உன்னை
பெருகவே பெருகப்பண்ணுவேன்
என்று வாக்குரைத்த தேவன்
என்றும் வாக்கு மாறா தேவன்
தம்மில் ஆணையிட்ட தேவன்
எவ்வளவும் பொய்யுரையாத தேவன்
1. அவர் ஆபிரகாமின் தேவன்
அவர் ஈசாக்கின் தேவன்
அவர் யாக்கோபின் தேவன்
அவர் உனக்கும் எனக்கும் தேவன்
2. அவர் தேடுவோரின் தேவன்
அவர் நம்புவோரின் தேவன்
அவர் ஜெபத்தைக் கேட்கும் தேவன்
அவர் உனக்கும் எனக்கும் தேவன்
3. அவர் இரக்கத்தின் தேவன்
அவர் மன்னிக்கும் தேவன்
அவர் கிருபையுள்ள தேவன்
அவர் நீதியுள்ள தேவன்