nathiyinai karaikal thotarvathu pool

நதியினை கரைகள் தொடர்வது

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நதியினை கரைகள் தொடர்வது போல்
நாதனை நானும் தொடரணுமே -2
நேரம் பன்னிரண்டு ஆகும்போது
முட்கள் ஒன்றாய் இருப்பதுபோல்
ஏசுவும் நானும் இருக்கணுமே
1.ஏதேனுக்கு அழகு வனம் என்றால்
எரிகோவிற்கு அழகு மனம் அன்றோ
எகிப்துக்கு அழகு நைல் நதி என்றால்
எனக்கு அழகு இயேசு அன்றோ
2.சவுக்கடி எனக்கு கொடுத்தாலும்
கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருப்பேன்
எது வந்து போதும் கலங்காமல்
சத்தியம் ஏசுவுக்கு உயிர் கொடுப்பேன்