natchathiram oor natchathiram

நட்சத்திரம் ஓர் நட்சத்திரம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நட்சத்திரம் ஓர் நட்சத்திரம்
அது செய்த பணியோ விசித்திரம்
ஜீவனில்லா போதிலும்
அது ஜீவன் இயேசுவை காட்டிடும்
1. வாழ்வில் உயர விரும்பினேன்
என்னில் வசதிகள் பெற வாஞ்சித்தேன்
வானில் உயர்ந்து வாழ்வைப் பிறர்க்கு
வழங்கிட என்னை அளிக்கிறேன்
2. நாடி வந்தோர்க்கும் தேடி வந்தோர்க்கும்
நல்வழி நடத்திய நாளைப் போல்
நானும் இனிமேல் வானில் உயர்ந்து
நாதன் இயேசுவைக் காட்டுவேன்
3. அசைந்திடா என் வாழ்வதனில் இன்று
அலையைப் போல் வந்த மாற்றம் ஏன்
அண்ணல் இயேசுவை அண்டினேன்
இந்த அடிமையை அவர் மாற்றினார்