nanum enthan kutumpamum

நானும் எந்தன் குடும்பமும்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நானும் எந்தன் குடும்பமும்
நின்றதல்ல இயேசு நிறுத்தினாரே
கீழே நானும் விழுந்திடா
தாங்கினரே தம் கரத்தில்
நினைக்கும்போதே அற்புதமே
ஸ்தோத்திரம் அன்றி வேறே ஒன்றுமில்லை
ஹ.. லே.. லுயா
அப்பா அம்மா அறியும் முன்னே
உலக தோற்றம் முன் கண்டிரே
என் எதிர்காலம் உந்தன் கையில்
என்னை நடத்தும் உயர்த்திடும்
கொஞ்சம் கூட பயமில்லையே
தொடக்கமுமே இயேசு முடிவும் தானே
கொஞ்சம் கூட பயமில்லையே
அல்பாவுமே இயேசு ஒமேகாவுமே
ஹ.. லே.. லுயா
சொந்த பந்தம் கைவிட்டாலும்
ஜீவன் தந்த இயேசு உண்டு
தந்தார் என்னில் அபிஷேகம்
அது தானே எந்தன் பெலன்
அபிஷேகம் எந்தன் சொந்தம்
நிகராய் வேறே ஒன்றுமில்லை
ஹ.. லே.. லுயா