Nantri solvenae Yesu rajane Lyrics

நன்றி சொல்வேனே இயேசு ராஜனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நன்றி சொல்வேனே இயேசு ராஜனே
நன்னயம் அருளிய நாதனே
நிறைவுகள் தந்தீரே குறைவுகள் நீக்கியே
நிகரில்லாத தேவனே
என் உயிரும் நீர்தானே
என் உறவும் நீர்தானே
என் நலனும் நீர்தானே
என் பெலனும் நீர்தானே
அத்தன் பாதமே அபயம் கொண்டேனே
ரத்தம் சிந்தியே மீட்டீரே
தந்தை தாயாகி எல்லாமுமாகி
எம்மை சேயாக்கி கொண்டீரே
காயம் ஆற்றியே கவலை மாற்றியே
நெஞ்சம் தேற்றிய நேசரே
உம்மை போற்றியே உள்ளம் ஊற்றியே
துதி சாற்றினோம் இயேசுவே