Nantri Seluthuvaayae

நன்றி செலுத்துவாயே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நன்றி செலுத்துவாயே – Nantri Seluthuvaayae
நன்றி செலுத்துவாயே என் மனமே நீ
நன்றி செலுத்துவாயே.
1.அன்றதம் செய்தபாவம் போன்று நிமித்தமாக‌
இன்றவதாரம் செய்த இயேசுவுக்கே – நன்றி
2.தேவசேயனும் தன் சேணுலகத்தை விட்டு
ஜீவ மனிதனாகவே ஜெனித்ததாலே – நன்றி
3.அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர்
துதிபெறப் பாத்திரராம் சுதனவர்க்கே – நன்றி
4.வல்லமையுள்ள தேவன் வான நித்தியபிதா
சொல்லரும் பரப்பொருளாம் சுதனவர்க்கே – நன்றி
5.உன்னதத் தேவனே உமக்கே மகிமையுடன்
இந்நிலம் சமாதானம் என்றுமுண்டாக – நன்றி
6.ஆண்டவர் தாசரை அன்பின் பெருக்கத்தால்
ஆசீர்வதிப்பதாலே அருமையாக – நன்றி