Nantiyaal Ponguthae Emathullam

நன்றியால் பொங்குதே எமதுள்ளம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நன்றியால் பொங்குதே எமதுள்ளம்
நாதன் செய் பல நன்மைகட்காய்
நாள்தோறும் நலமுடன் காத்தனரே
நன்றியால் ஸ்தோத்தரிப்போம் – அல்லேலூயா
1.கடந்த வாழ்வில் கருத்துடனே
கண்மணிபோல் நம்மைக் காத்தனரே
கண்ணீர் கவலையினை மாற்றினாரே
கனிவுடன் ஸ்தோத்தரிப்போம் – அல்லேலூயா
2.ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்து
ஜீவிய பாதை நடத்தினாரே
ஜீவ காலமெல்லாம் ஸ்தோத்தரிப்போம்
ஜீவனின் அதிபதியை – அல்லேலூயா
3.அற்புத கரம் கொண்டு நடத்தினாரே
அதிசயங்கள் பல புரிந்தனரே
ஆயிரம் நாவுகள் தான் போதுமா
ஆண்டவரைத் துதிக்க – அல்லேலூயா
4.பாவ சேற்றில் அமிழ்ந்த எம்மை
பாச கரம் கொண்டு தூக்கினாரே
கன் மலைமேல் நம்மை நிறுத்தி அவர்
கருத்துடன் காத்தனரே – அல்லேலூயா
5.பொருத்தனை பலிகள் தினம் செலுத்தி
போர்பரன் இயேசுவை வாழ்த்திடுவோம்
ஸ்தோத்திர பாத்திரன் இயேசுவையே
நேத்திரமாய் துதிப்போம் – அல்லேலூயா