Nanti Entu Sollukirom Naathaa

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
நாவாலே துதிக்கிறோம் நாதா
நன்றி இயேசு ராஜா
நன்றி இயேசு ராஜா
1. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா
புதிய நாளை தந்தீரே நன்றி ராஜா — நன்றி
2. ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா
அதிசயம் செய்தீரே நன்றி ராஜா — நன்றி
3. வாழ்க்கையிலே ஒளி விளக்காய் வந்தீரையா
வார்த்தை என்ற மன்னாவை தந்தீரையா — நன்றி
4. அடைக்கலமே கேடயமே நன்றி ராஜா
அன்பே என் ஆறுதலே நன்றி ராஜா — நன்றி
5. தனிமையிலே துணை நின்றீர் நன்றி ராஜா
தாயைப் போல தேற்றினீர் நன்றி ராஜா — நன்றி
6. சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கினீரே
சுகம் தந்து இதுவரை தாங்கினீரே — நன்றி
7. புது வாழ்வு தந்தீரே நன்றி ராஜா
புதுபெலன் தந்தீரே நன்றி ராஜா — நன்றி
8. ஊழியம் தந்தீரே நன்றி ராஜா
உடனிருந்து நடத்தினீரே நன்றி ராஜா — நன்றி