nanri koori patituven

நன்றி கூறி பாடிடுவேன்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நன்றி கூறி பாடிடுவேன்
நாள் தோறும் உம்மை நானே(2)
நல்லவரே வல்லவரே உமது நாமத்தை பாடிடுவேன்(2)
குழு:
அதிசயம் செய்யும் என் நேசரே
அடைக்கலம் தருகின்ற என் நேசரே(2)
பாவியான என்னை நீரே பரிசுத்த மாக்குமய்யா(2)
( நன்றி கூறி)
சரணம் :1)
வீழ்ந்து நான் கிடந்த போது
கைத்தந்து தூக்கினீர்
தனிமையில் அலைந்த போது அடைக்கலம் தந்தீர் (2)
வெட்கப்பட்டு
தலை குனிந்து நின்ற போது
தலை நிமிர என்னை வழி நடத்தினீர(2)
அதிசயம் செய்யும் என் நேசரே அடைக்கலம் தருகின்ற நேசரே (2)
பாவியான என்னை நீரே பரிசுத்தமாக்குமய் யா(2)
சரணம்:2)
இருள்களில் தவித்த போது ஒளியாய் நீர் வந்தீர்
இமையாமல் என் வாழ்வில் துணையாய் நீர் நின்றீர் (2)
பிழைகளை மன்னித்து பிறவியைக்கேட்டேன் எனக்காக செவி சாய்த்து வாழ்வைத்தந்தீர் என்
பிழைகளை மன்னித்து பிறவியைக்கேட்டேன் எனக்காக செவி சாய்த்து வாழ்வைத்தந்தீர்
அதிசயம் செய்யும் என் நேசரே
அடைக்கலம் தருகின்ற நேசரே(2)
பாவியான என்னை நீரே பரிசுத்த மாக்குமய்யா(2)
(நன்றி கூறி)