Nanmaiyaanaa Eevugal Lyrics

நன்மையான ஈவுகளும்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.

Scale: F# minor,
Tempo: 129.
பல்லவி.
நன்மையான ஈவுகளும் பூரணமான வரங்களும். 2.
ஜோதிகளின் பிதாவிடம் இருந்து இறங்கி வந்திடுமே. 2.
அனுபல்லவி.
புதிய ஆண்டு புதிய கிருபை புதிய வாசல் திறந்திடுவார். 2.
1.கடினமான கானகப் பாதையை கடந்து காணானை சுதந்தரிப்போம், 2.
சூழ்நிலை யாவும் எதிராகும்போது சூழும் நம்மேல் தேவ கிருபை. 2.
2.சத்துரு நம்மை ஜெயித்திடாமல் சத்திய தேவன் காத்திடுவார், 2.
நம் புலம்பலை ஆனந்த களிப்பாக தேவன் மாற செய்திடுவார். 2.
3.நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக செய்திடுவார், 2.
நமது திட்டங்கள் அனைத்தையுமே இந்த ஆண்டில் நிறைவேற்றுவார். 2.
4.நன்மையான ஈவுகளும் பூரணமான வரங்களும். 2.
ஜோதிகளின் பிதாவிடம் இருந்து இறங்கி வந்திடுமே. 2.