nanmaikal nam vazhvil

நன்மைகள் நம் வாழ்வில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நன்மைகள் நம் வாழ்வில்
ஏராளமாய் நல்கினாரே
இயேசு தாராளமாய் -2
நன்றி சொல்லி நாம் பாடிடுவோம்
நல்லவர் இயேசுவை துதித்திடுவோம்-2
நன்றி உமக்கு நன்றி நன்றி இயேசுவே-2- நம் வாழ்வில்
கர்த்தரால் ஆகாத கரரியம் உண்டோ
சாராளுக்கும் ஓர் குமாரனை கொடுத்தாரே -2
எல்லாவற்றிலும் ஸ்தோத்திரம் செய்வோமே
தேவனின் செயல்கள் அறிந்திடுவோமே -2 நன்மைகள்
யோசேப்போடே கர்த்தர் இருந்ததினாலே
காரிய சித்தியை பெற்றுவிட்டாரே -2
கர்த்தரையே நாம் சார்ந்திருந்தால்
காரியம் யாவும் வாய்த்திடுமே -2 நன்மைகள்
சாமுவேலோட கர்த்தர் இருந்ததினாலே
அவரின் வார்த்தைகள் நிறைவேறினதே -2
ஜீவ தேவனோடு நடந்திட்டாலே நம் சாட்சி
உலகிற்கே வழிகாட்டுமே -2 – நன்மைகள்