Nanmaigal Seythavarkku

நன்மைகள் செய்தவர்க்கு நன்றி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள் தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்.
நன்றி அப்பா இயேசப்பா (4)
இமைப்பொழுதும் என்னை நீர்
கைவிடவில்லை – நிமிடந்தோறும்
விசாரித்து நடத்துகிறீர்
என் நாட்களெல்லாம் உம்
கரத்தில் இருக்கிறது – வருஷங்களை
நன்மையினால் முடி சூட்டினீர்
உலகம் என்னை தூற்றும்போது
தேற்றினீரையா – உறவெல்லாம்
வெறுத்தபோது அன்பு கூர்ந்தீரே
நண்பன் என்னை பகைத்தபோது
நண்பனானீரே – உண்மையில்லா
என்னையும் நீர் தேடி வந்தீரே
பாவசேற்றில் இருந்த என்னை
தூக்கியெடுத்தீரே – நாற்றமெல்லாம்
கழுவி என்னை மார்பில் அணைத்தீரே
அனுதினமும் அபிஷேகித்து மகிழ்விக்கிறீரே
அப்பா உந்தன் சித்தம் செய்ய பழக்குவித்தீரே
சோர்ந்துபோன நேரமெல்லாம்
சூழ்ந்து கொண்டீரே – சோதனைகள்
மாற்றி எனக்கு ஜெயம் தந்தீரே
தாயைப் போல நாளும் என்னை
தேற்றுகிறீரே – என் தகப்பனே
உம்மைத்தானே துதித்து பாடுவேன்