Nandri Thagapanae Lyrics

நன்றி தகப்பனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நன்றி சொல்லி பாடிடுவேன்
நீர் செய்த நன்மைகள் ஏராளமே
நன்றி சொல்லி துதித்திடுவேன்
இம்மட்டும் நடத்திட கிருபைக்காய் -2
நன்றி தகப்பனே
நன்றி ராஜனே
நன்றி தகப்பனே
நன்றி ராஜனே
கண்மலை மேல் என்னை உயர்த்தி வைத்தீர்
காக்கும் உம் கரங்களால் அணைத்து கொண்டீர் -2
நண்பராய் எந்தன் கூடவே நடக்கின்றீர்
மெய்ப்பராய் என் முன் என்றும் நீர் செல்லுவீர் -2 நன்றி தகப்பனே
இரட்சிப்பின் கேடயம் எனக்கு தந்தீர்
என் தலையை என்னையால் அபிஷேகித்தீர்-2
கேதுரு போல வளர செய்தீர்
பணையை போல செழிக்க வைப்பீர் -2 நன்றி தகப்பனே
என் நினைவாய் என்றும் இருப்பவரே
உம் அன்பை பாடி நான் துதித்திடுவேன்-2
உம் தேவன் என்றும் நிலைத்து நிற்ப்பேன்
உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே -2 – நன்றி தகப்பனே