Nandri Solli Padiduvean Lyrics

நன்றி சொல்லி பாடிடுவேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நன்றி சொல்லி பாடிடுவேன் கர்த்தர் செய்த நன்மைகளை
நன்றி மறவாத இதயத்துடன் நாதா நான் உம்மை துதிப்பேன்
என் வாழ்நாளெல்லாம் துதிப்பேன்
துதியும், கனமும், புகழும் ஸ்தோத்திரமும் – 2
என் இயேசு ராஜாவுக்கே, என் வாழ்நாளெல்லாம் உமக்கே
தாழ்வில் இருந்த என்னை தயவாய் நினைத்தவரே
தள்ளப்பட்ட என்னையும் தகுதி படுத்தினீரே
இரட்சண்யத்தின் சந்தோஷத்தால் என் வாழ்வினை அலங்கரித்தார்
கிருபையென்னும் மதில்களினால் என் வாழ்வின் துணையாகினார்
வானத்தின் நன்மைகளால் வாழ்வை திருப்திச்செய்தார்
வற்றாத நீரூற்றைப்போல் வாய்க்காலை நிரப்பிவிட்டார்
எண்ணில்லாத நன்மைகளால் என் வாழ்வினை செழிப்பாக்கினார்
என்றும் தொடரும் நன்மைகளால் என் வாழ்வை நிலைக்கச்செய்தார்