nanbane en nanbane kadanthu

நண்பனே என் நண்பனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நண்பனே என் நண்பனே கடந்துவந்த
வழியை நீயும் திரும்பி பாராயோ
இன்று திரும்பி பாராயோ
இன்பத்தில் திளைத்து சுகித்து வாழ்க்கையில்
தன்னிலை ஏன் மறந்தாய் நீ ஏன்
சுயநலமாய் வாழ்ந்தாய் -2
துன்பத்தில் வாடி துடிதுடிக்கும்
உறவினை மறந்தாய்
உந்தன் சொந்தங்களை மறந்தாய் - 2
1.என்னிடம் எல்லாம் உண்டென்று எண்ணி
அகந்தை கொள்ளாதே (2) நீ இன்று
கொடுத்தது யாரென சற்றும் எண்ணாமல்
பெருமை கொள்ளாதே இறைவன் கொடுத்ததை மறவாதே - 2
2. உள்ளது யாவுமே ஒரு நொடியினில்
அழிந்து போலாமே (2) நொடியில்
கொடுத்த இறைவன் எடுக்க நினைத்தால்
தடுக்கலாகுமோ உன்னால் தடுக்க முடியுமோ -2
3. இயேசுவால் கிடைத்த நன்மைகளை நீ
எண்ணி துதிப்பாயே (2) இன்றே
உன்னிலும் சிறியேன் உண்டென்று எண்ணி
உதவி செய்வாயே உள்ளதைபகிர்ந்து வாழ்வாயே -2