nan vitamatten en yesuvai – Naan Vida Maattean En Yesuvai

நான் விடமாட்டேன் என் யேசுவை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நான் விடமாட்டேன் என் யேசுவை – Naan Vida Maattean En Yesuvai
பல்லவி
நான் விடமாட்டேன் என் யேசுவை.
அனுபல்லவி
வான் புவியாவும் போனாலும்; அத்தால்
மயங்கியே ஒருக்காலும் மெய்யாய்
சரணங்கள்
1.முந்தியென் மேலன்பு கூர்ந்தார்; இங்கே
முக்கிய நன்மை தரச் சேர்ந்தார்; தீய
எந்தனுக்காய்த் தம்மை யீந்தார்; எனக்
கெண்ணரு நன்மைகள் நேர்ந்தார்; மெய்யாய்
2.வானலோகந்தனைத் துறந்தார்; ஏழை
மானிடனாகவே பிறந்தார்; மிக்க
ஈனனெனக்காக இறந்தார்; பேய் மேல்
என்றனுக்காய் ஜெயஞ்சிறந்தார்; மெய்யாய்
3.மேசியாவுக் கிணையுண்டோ? அவர்
வேதத்துக்கொப்பு கற்கண்டோ? எனின்
நேசர்சமுகம் பூச்செண்டோ? இந்த
நீசனதில் மொய்க்கும் வண்டோ? மெய்யாய்
4.லோகமெனை உதைத்தாலும், பொல்லா;
லோபிகள் துஷ்டர் மொய்த்தாலும், பசி
தாகநோயும் வதைத்தாலும் இந்தத்
தாரணியோர் சிதைத்தாலும்; மெய்யாய்.