nan vetkappattu poovathillai

நான் வெட்கப்பட்டு போவதில்லை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நான் வெட்கப்பட்டு போவதில்லை,
உம்மை நோக்கி பார்த்ததினால் -(2)
தலை உயர்த்தி என்னை, நிலைநிறுத்தி என்றும்,
தலை நிமிர செய்தீரே -(2)
1) தோல்விகள் வந்த போதும்,
மன சோர்வுகள் சூழ்ந்த போதும் -(2)
மன மகிழ்ச்சி தந்து, வேதனை நீக்கி;
உமதாவியால் நிரப்பினீரே -(2)
உமதாவியால் நிரப்பினீரே.
2) பெலவீன நேரங்களில்,
நான் சோர்ந்த வேளைகளில் -(2)
தம் பெலத்தால் என்னை இடைக்கட்டி,
உம் சாட்சியாய் நிறுத்தினீரே -(2)
உம் சாட்சியாய் நிறுத்தினீரே.
3) இயேசுவே நீர் என் தேவன்,
என் ஆத்தும நேசர் நீரே -(2)
என்னை கை விடாமல், என்னை தள்ளிடாமல்,
என்னை காத்து நடத்தினீரே -(2)
என்னை காத்து நடத்தினீரே ….(நான் வெட்கப்பட்டு)
நான் வெட்கப்பட்டு போவதில்லை பாடல் வரிகள், Naan vekapattu povathillai Lyrics