nan unnootu iruppathinal

நான் உன்னோடு இருப்பதினால்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நான் உன்னோடு இருப்பதினால்
நீ வெட்க்கப்பட்டு போவதில்லை-2
நான் உன்னை விட்டு விலகுவதில்லை.
நான் உன்னை என்றும் கை விடுவதில்லை-2
1. ஒரு வழியாக எதிரி வந்தால்
ஏழு வழியாய் ஓடுவான்-2
உனக்கெதிரான ஆயுதங்கள்
வாய்க்காதே போகும் -2
2. தேசத்தில் எங்கும் பஞ்சங்களோ
தாக்கிடும் கொள்ளை வியாதிகளோ -2
எதுவும் உன்னை அணுகிடாதே
கர்த்தரின் கரம் உன்னோடு -2
3. வாழ்க்கையிலே குறைவுகளோ
இதயத்தை வாட்டும் தேவைகளோ-2
இதுவரையில் நடத்தின இயேசு
இனியும் நடத்திடுவார்-2
நான் உன்னோடு இருப்பதினால் பாடல் வரிகள், Nan unnodu iruppathinal Lyrics