nan nirpathum nirmoolamakamal iruppathum

நான் நிற்பதும் நிர்மூலமாகாமல்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நான் நிற்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும்
கிருபையே இயேசுவே உந்தன் கிருபையே
நான் உயிரோடிருப்பதும் நிலைத்திருப்பதும்
கிருபையே இயேசுவே உந்தன் கிருபையே – 2
1. நான் அடிக்கப்பட வேண்டும் நீர் அடிக்கப்பட்டீரே
நான் காயப்பட வேண்டும் நீர் காயப்பட்டீரே
நான் அரையப்பட வேண்டும் நீர் அரையப்பட்டீரே
நான் மரிக்கப்பட வேண்டும் நீா் எனக்காய் மரித்தீரே
எல்லாம் எனக்காய் இத்தனை கிருபை
இயேசுவே உந்தன் கிருபை – 2 நான் நிற்பதும்
2. என் பாவம் கழுவப்பட நீர் பாவமானீரே
என் சாபம் நீக்கப்பட நீர் சாபமானீரே
என் சுமைகள் நீக்கப்பட நீர் சிலுவையை சுமந்தீரே
நான் சுகமுடன் வாழ்ந்திருக்க நீர் உயிரோடெழுந்தீரே
எல்லாம் எனக்காய் இத்தனை கிருபை
இயேசுவே உந்தன் கிருபை – 2 நான் நிற்பதும்
எல்லாம் எனக்காய் இத்தனை கிருபை
இயேசுவே உந்தன் கிருபை – 5