nan nanaka varukiren

நான் நானாக வருகிறேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நான் நானாக வருகிறேன்
என் தகப்பனே
என்னை தானாக தருகிறேன்
என் தகப்பனே-2
உம்மை துதிக்க வந்தேன்
போற்ற வந்தேன்
வாழ்த்துகிறேன்
வரவேற்கிறேன்
உம்மை துதிக்க வந்தோம்
போற்ற வந்தோம்
வாழ்த்துகிறோம்
வரவேற்கிறோம்
உம்மை வரவேற்கிறோம்
எந்தன் நெருக்கத்திலே
உம்மை நோக்கி நெருங்கினேன்
எந்தன் நெருக்கத்திலே
பெருக்கத்தை நீர் பெருக்கினீர்
என் கிரியை அல்லவே
உம் கிருபை அல்லவோ
என் நீதி அல்லவே
உம் நீதி அல்லவோ
நான் சிறுக சிறுகணும்
நீங்களோ பெருக பெருகனும்-2
எந்தன் அற்பமான ஆரம்பத்தில்
உமை அழைத்தேன்
எந்தன் அற்பத்தை நீர்
அற்புதமாய் மாற்றினீர்
என் சுயமல்லவே,
உம் புயமல்லவோ
என் தேவை அல்லவே
உம் சேவை அல்லவோ
நான் சிறுக சிறுகணும் நீங்களோ பெருக பெருகனும் -2
நான் நானாக வருகிறேன்
என் தகப்பனே
என்னை தானாக தருகிறேன்
என் தகப்பனே-2
உம்மை துதிக்க வந்தேன்
போற்ற வந்தேன்
வாழ்த்துகிறேன்
வரவேற்கிறேன்
உம்மை துதிக்க வந்தோம்
போற்ற வந்தோம்
வாழ்த்துகிறோம்
வரவேற்கிறோம்
உம்மை வரவேற்கிறோம்
நான் துதிக்க வேண்டும்
ஆவியால் நிரம்ப வேண்டும்
உம்மை உயர்த்த வேண்டும்
உமக்காய் வாழ வேண்டும்.
நான் நானாக வருகிறேன் பாடல் வரிகள், Nan Nanaga Varugiren Lyrics