nan nan nan yaroo

நான் நான் நான் யாரோ

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நான் நான் நான் யாரோ
நானே அறியவில்லை
நீர் நீர் நீர் யாரோ
ஏன் என்னை வெறுக்கவில்லை
என் இறைவா நீ வரவேண்டும்
என் இயேசுவே நீ வரவேண்டும்
என் உயிரே நீ வரவேண்டும்
என் உயிரோடு கலக்க வேண்டும்
1)இரவெல்லாம் இமை இரண்டும்
மூடாமல் தவிக்கின்ற போது -2
என் இதயம் துடிக்கின்ற போது -2
இரக்கம் கொள்பவர் யாரோ -என் இறைவா
2)ஆயிரம் ஆயிரம் சொந்தம் இருந்தும்
அனாதை ஆனோர் எத்தனையோ-2
அன்புக்கு இங்கே இடமில்லை-2
என் அன்பே நீர் என்னை விடவில்லை -என் இறைவா
3)திசை அறியாத கப்பலை போல்
திகைத்தும் மனமும் வாடும் போது-2
மரணம் என்னை நெருங்கிடும் போது-2
மனிதர் துணையும் யாரும் இல்லை – என் இறைவா