nan kiristhuvukku paiththiyakkaran

நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் நீ யாருக்கு
வீண் பெருமை புகழ் ஆஸ்தி குப்பை என்று தள்ளிடு
நீ துடைத்துப்போடும் அழுக்கைப் போல காணப்பட்டாலும்
பின்வாழ்வுக்காக உலகை வெறுத்து ஒதுக்கி தள்ளிடு
பலவான்களை வெட்கப்படுத்தவே
பெலவீனரை தேவன் தெரிந்துகொண்டாரே (2)
ஞானவான்களைப் பைத்தியமாக்கவே
பைத்தியங்களை தேவன் தெரிந்துகொண்டாரே
நகையிலே பைத்தியம் புகையிலை பைத்தியம்
உடையிலே பைத்தியம் எதற்கு நீ பைத்தியம்
மண்ணாசை பைத்தியம் பெண்ணாசை பைத்தியம்
மயக்க மருந்து நீ எதற்கு பைத்தியம்
சாராய பைத்தியம் பீர் ஜின்னு பைத்தியம்
ரம் விஸ்கி பைத்தியம் காப்பி டீ பைத்தியம்
பதவி ஆசை பைத்தியம் ஆளுக்காக பைத்தியம்
நீ எதற்கு பைத்தியம்
தேவன் உன்னிலே உலக செல்வம் அழியுமே
உயர்ந்த ஆடைகள் போட்டரித்து போகுமே
உலக ஞானமே தேவன் பார்வையில்
உதவும் பைத்தியம் என்று ஆகுமே