nampikkaiyin vasalulle

நம்பிக்கையின் வாசலுல்லே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நம்பிக்கையின் வாசலுல்லே
நுழைந்திட நுழைந்திட வந்துவிட்டோம்
இரட்டிப்பான நன்மைகளை
இப்போதும் எப்போதும் பெற்றிடுவோம்-2
ஆ..லேலூயா -4
கர்த்தாதி கர்த்தரை உயர்த்திடுவோம்
இயேசு இராஜாதி இராஜனை துதித்திடுவோம் -2 – நம்பிக்கையின்
1.ஆகோரின் பள்ளத்தாக்கை நெருங்கிடுவோம்
ஆகானின் கிரியை அழித்திடுவோம் -2
ஒன்றாக சேர்வோம் விசுவாசம் காண்போம்
விண்ணவரின் துதி முழங்கிடுவோம் -2
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் புது வருடத்தில் மகிமையால் நிறைந்திடுவோம்
கொண்டாடுவோம் இயேசுவை கொண்டாடுவோம்
புது வருடத்தில் மகிமையால் நிறைந்திடுவோம் -ஆ..லே
2.பாடுகள் பாதையில் கடந்து வந்தோம்
பாரங்கள் பல வகை சுமந்துவந்தோம் -2
மாறாத தேவன் மனதார நினைத்தார்
மறவாமல் என்றும் நன்றி சொல்வோம் -2 கொண்டாடுவோம்
3.மண்ணான மனிதனை நினைப்பதற்க்கும்
மகிமையில் உம்மோடு இணைப்பதற்க்கும் -2
திரு இரத்தம் சிந்தி சாபங்கள் நீக்கி
பரிசுத்த வாழ்வைப் பரிசளித்தீர் -2 கொண்டாடுவோம்
நம்பிக்கையின் வாசலுல்லே பாடல் வரிகள், Nambikkain Vasalule lyrics