Nambikaikuriyavare enthan aatharame

நம்பிக்கைக்குரியவரே எந்தன் ஆதாரமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நம்பிக்கைக்குரியவரே எந்தன் ஆதாரமே -2
என்னோடு இருப்பவரே கைவிடாமல் காப்பவரே
யெகோவா யீரே என் தெய்வமாம்
எல்லாம் பார்த்து கொள்வீரே
யெகோவா ஷம்மா நீர் என் தெய்வமாம்
கூட இருப்பவரே
என் கூட இருப்பவரே
எல்லாம் பார்த்து கொள்வீரே – நம்பிக்கைக்குரியவரே
எல்ஷடாய் தெய்வம் நீர் சர்வ வல்லவர்
எல்லாம் செய்பவரே
யெகோவாஹ் ராபா நீர் என் தெய்வமாம்
சுகம் தரும் பிசின் தைலமே
எல்லாம் செய்பவரே
சுகம் தரும் என் தெய்வமே – நம்பிக்கைக்குரியவரே
யெகோவாஹ் ஷாலோம் நீர் என் தெய்வமாம்
சமாதான காரணரே
யெகோவா நிசி நீர் என் தெய்வமாம்
ஜெயம் தரும் வெற்றி கொடியே
சமாதான காரணரே
ஜெயம் தரும் என் தெய்வமே – நம்பிக்கைக்குரியவரே
“தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya