nam vazhvin ooviyangkal – Nam Vaalvin Ooviyangal

நம் வாழ்வின் ஓவியங்கள்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

நம் வாழ்வின் ஓவியங்கள் – Nam Vaalvin Ooviyangal
நம் வாழ்வின் ஓவியங்கள் வண்ணமாகிட
உதிரா பூக்களாக வாழ்வு மலர்ந்திட
நம் வாழ்வின் ஓவியங்கள் வண்ணமாகிட
உதிரா பூக்களாக வாழ்வு மலர்ந்திட
எனைக் காக்கும் நிழலாக என் சார்பாய் இருப்பவரே
என் உள்ளம் நலம் பெறவே இறை உணவாய் எழுபவரே
தினம் தினம் அருள் தரும் ஆன்ம உணவே வா
உயிர்ப்பினை உணர்த்திடும் உறவின் வடிவே வா
உன்னருளால் இவ்வுலகம் இயங்கிடவே – தினம்
உன் வரவால் உம் அரசும் மலர்ந்திடவே
உன்னருளால் இவ்வுலகம் இயங்கிடவே – தினம்
உன் வரவால் உம் அரசும் மலர்ந்திடவே
உண்மை தேவன் வெற்றி வீரன் உயிர்த்தார் இன்று
உலகமெல்லாம் உணர்ந்திடவே செய்திடுவீரே
உண்மை தேவன் வெற்றி வீரர் உயிர்த்தார் இன்று
உலகமெல்லாம் உணர்ந்திடவே செய்திடுவீரே
உயிரோடும் உடலோடும் உயிர்த்தவர் நீரே
எம் உடலோடு உயிராக கலந்திடுவாயே
உயிர்ப்பே எனக்கு ஆதாயமே
உம் உயிர்ப்பே எந்நாளும் ஆதாரமே
ஆதாரமே ஆதாரமே
தினம் தினம் அருள் தரும் ஆன்ம உணவே வா
உயிர்ப்பினை உணர்த்திடும் உறவின் வடிவே வா
நம் வாழ்வின் ஓவியங்கள் வண்ணமாகிட
உதிரா பூக்களாக வாழ்வு மலர்ந்திட