nam vazhikalai aantavaritam

நம் வழிகளை ஆண்டவரிடம்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.

நம் வழிகளை ஆண்டவரிடம்
ஒப்புக் கொடுத்திடுவோம்
அவர் மேலே நம்பிக்கை வைப்போம்
நம் சார்பில் செயலாற்றுவார்
ஒப்புக்கொடுத்திடுவோம் அவரையே நம்பிடுவோம்
நம்பிக்கை வீணாகாது – நாம் மறக்கப் படுவதில்லை
1. உன்னதரோடு உறவு கொண்டு நன்மைகள் செய்திடுவோம்
நீதியின் வாழ்வுக்கு ஏற்றபடி நம் செயல்களை மாற்றிடுவோம்
மெய் வாழ்வு அடைந்திடவும் உயர்வுகள் பெற்றிடவும்
அவர் கரத்தினுள் அடங்கிடுவோம்.
2. அனைவருடன் ஒப்புரவுடன் அருட்பணி செய்திடுவோம்
ஒருமனப் பாட்டுடன் ஐக்கியமாய் சிறந்ததை அர்ப்பணிப்போம்
நிலையான வாழ்வு பெற, இறைசித்தம் நிறை வேற்றிட
உண்மையாய் ஒப்படைப்போம்.
(முழுமையாய்)