nam patuvoom kontatuvoom – Naam Paaduvoam Kondaduvoam

நாம் பாடுவோம் கொண்டாடுவோம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

நாம் பாடுவோம் கொண்டாடுவோம் – Naam Paaduvoam Kondaduvoam
நாம் பாடுவோம் கொண்டாடுவோம்
எந்நாளுமே நம் இயேசுவை – 2
விண்ணை விட்டாரே மண்ணை தொட்டாரே – 2
விண்ணை விட்டு மண்ணை தொட்டு
நம்மை மீட்ட தேவதை பாடு – 2
அனாதையான தம் ஜனம் மீட்க
அனாதி தேவன் இறங்கி வந்தார்
மரணத்தின் விளிம்பில் மயங்கி கிடந்த
மனிதனை மீட்க இயேசு வந்தார் – 2
உன்னை நீயும் சீர்படுத்து
இயேசு சீக்கிரம் வருகின்றார் – 2
உன்னை நீயும் சீர்படுத்து
இயேசு மீண்டும் வருகின்றார். – நாம் பாடுவோம்
வார்த்தையானது மாம்சமாகி
கிருபையினாலே வெளிப்பட்டதே
அந்த வார்த்தை உன்னுள் நிலைத்தால் நித்தியஜீவன் பெறுவாயே – 2
உன்னை நீயும் பலப்படுத்து
இயேசு மீண்டும் வருகின்றார்
இயேசு சீக்கிரம் வருகின்றார் – 2. – நாம் பாடுவோம்