nam munnae nadanthu selbavar

நம் முன்னே நடந்து செல்பவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நம் முன்னே நடந்து செல்பவர்
நம் பின்னும் நடந்து வருகிறார்
நம்மை சுற்றிலும் இருப்பார் பாதுகாத்திடுவார்
தீமைகளை நன்மையாக்குவார்
நாமோ கரங்களைத் தட்டி இயேசுவைப் பாடுவோம்
ஆர்ப்பரிப்போமே நடனமாடுவோம்
ஓயாமல் அவர் துதியை எங்கும் சொல்லுவோம்
பயமுறுத்தும் செங்கடலைப் பிளந்திடுவார்
பாதுகாக்கும் மதிலாக மாற்றிடுவார்
வெட்டாந்தரையில் நம்மை நடக்கச்செய்வார்
நம் கண்முன்னே சத்துருக்க அழியச் செய்வார்
வனாந்திர வாழ்க்கையிலே எகிப்தின் நினைவோ
கானானுக்கு போக வேண்டும் சிந்தையில்லையோ
எகிப்தை மறந்தால் கானான் நினைத்தால்
பாலும் தேனும் ஓடும் தேசம் நிச்சயம் தருவாரே