nallavare sarva vallavare – Nallavarae sarva vallavarae

நல்லவரே சர்வ வல்லவரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நல்லவரே சர்வ வல்லவரே – Nallavarae sarva vallavarae
நல்லவரே சர்வ வல்லவரே என்னை நாள்தோறும் நடத்துவீரே – 2
1. மனிதர் என்னை கீழே தள்ளினாலும்
உம் கிருபையால் என்னை உயர்த்தினீரே – நல்லவரே – 2
2. நான் நேசித்தவர் என்னை வெறுத்தாலும் உம் அன்பால் என்னை நேசித்தீரே – நல்லவரே – 2
3. தாழ்வில் என்னை நினைத்தீரே உம் காருண்யத்தால் என்னை அணைத்தீரே – நல்லவரே – 2
4. சிலுவையில் எனக்காய் மரித்தீரே
என் பாவங்கள் யாவையும் மன்னித்தீரே – நல்லவரே – 2
5. இம்மட்டும் என்னை நடத்தினீரே இனிமேலும் என்னை நடத்துவீரே – நல்லவரே – 2