1.nalla ennamay vizhiththu

நல்ல எண்ணமாய் விழித்து

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.நல்ல எண்ணமாய் விழித்து,
தெளிவாகு நெஞ்சமே;
தேவ அன்பையே சிந்தித்து,
ஸ்தோத்திரி, என் உள்ளமே;
இந்த நாளில்
கர்த்தர் உன்னைக் காத்தாரே.
2. ஆ! பிதாவே, மா அன்புள்ள
தேவரீர் என் வேலையை
வாய்க்கப்பண்ணி, துன்பமுள்ள
பாரம் விக்கினங்களை
நீக்கிப்போட்டீர்;
அதற்காக ஸ்தோத்திரம்.
3.அருள்வீசும் ஜோதியான
கர்த்தர் இந்த ராவிலும்
என்னில் தேவரீர் அன்பான
ஜோதியாய் பிரகாசியும்;
என்றென்றைக்கும்
என்னைக் கைவிடாதிரும்.
4.எந்தன் ஆவி, தேகம், ஆஸ்தி,
வீட்டார் சுற்றத்தாரையும்,
தேவரீர் அன்பாய்க் காப்பாற்றி,
என் பகைஞர் யாரையும்
கேட்டினின்று
நீக்கி இரட்சித்தருளும்.