1. nal siru theepama yennai

நல் சிறு தீபமா யென்னை
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

1. நல் சிறு தீபமா யென்னை
வல்ல தேவா ஆக்கும்
செல்லுமிட மெங்கும் ஒளி
வீசிப் பிரகாசிக்க
2. சிறுவனாம் என் ஜீவனை
நறு மலராக்கும்
சிறப்புடனே சோலையில்
பிறப்பிக் கானந்தம்
3. ஆக்கிடு மென்னைக் கீதமாய்
ஆறுத லளிக்க
பலமாக்கி அயலாரை
ஆனந்தமாக்கிட
4. களைப்புற்றோரை, கர்த்தாவே
இளைப்பாற்ற என்னை
தழைப்புற்ற கோலாக்கிடும்
உழைக்க அவர்க்காய்