Naan nambum kanmalai song lyrics

நான் நம்பும் கன்மலை
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நான் நம்பும் கன்மலை
நான் நம்பும் தேவன்
நான் நம்பும் அடைக்கலமே _2
நான் உம்மைத்தான் நம்பியிருப்பேன்
நான் நம்பும் கேடகமும் மறைவிடமே
சூழ்நிலைகள் வாய்த்தாலும்
வாய்க்காமலே போனாலும்
நான் நம்புகின்ற யாவரும்
எனக்கு எதிராய் நின்றாலும்
இயேசு என்னோடு இருக்கின்றார்
என் தேவை நன்றாய் அறிந்திடுவார்
துவக்கினவர் நடத்திடுவார்
சொன்னதை செய்திடுவார்
காரியங்கள் வாய்க்கச் செய்யும்
கர்த்தர் என்னோடிருப்பதால்
நான் நம்புகின்ற யாவையும்
கர்த்தர் எனக்காய் செய்திடுவார்
இதுவரை என்னை நடத்தினவர்
இனியும் என்னை நடத்திடுவார்
இறுதி வரை உம்மைத்தான்
உறுதியாய் நம்பிடுவேன்