muyalvoom muyalvoom theva – Muyalvom Muyalvom Deva

முயல்வோம் முயல்வோம் தேவ

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

முயல்வோம் முயல்வோம் தேவ – Muyalvom Muyalvom Deva
1.முயல்வோம்! முயல்வோம்! தேவ ஊழியரே;
செல்லுவோம் யேசுநாதர் நற்பாதையிலே.
மிக்க ஞானத்தினால் வழி நடத்துவார்;
வல்ல ஆவியின் பெலனை அருளுவார்.
பல்லவி
முயல்வோம்… முயல்வோம்,
முயல்வோம்… முயல்வோம்,
நம்புவோம்… நாடுவோம்,
நல் மீட்பர் வருமளவும்.
2.முயல்வோம்! முயல்வோம்! சுவிசேஷகரே!
காட்டுவோம் தெளிவாய் ஜீவ மார்க்கத்தையே
பாவ நாச விசேஷத்தைப் எடுக்கவும் ,
ப்ராயச்சித்த நற்செய்தி விஸ்தரிக்கவும்.
3.முயல்வோம்! முயல்வோம்! விசுவாசிகளே!
கூறுவோம் கிறிஸ்துவின் ராஜரீகத்தையே
அந்தகாரத்தின் க்ரியைகள் நொறுக்குவார்;
பரலோக பேரின்பத்தை நாட்டுவிப்பார்.
4. முயல்வோம்! முயல்வோம்! தேவதாசர்களாய்
சேருவோம் மோட்ச லோகம் மகத்துவமாய்
அந்த லோகத்தின் ஜோதியில் ஆனந்திப்போம்;
சுகவாழ்வும் சந்தோஷமும் கண்டடைவோம்.