muthirai modhiram neeyae

முத்திரை மோதிரம் நீயே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

முத்திரை மோதிரம் நீயே
உன்னை நான் தெரிந்து கொண்டேன்
எந்தன் உள்ளங்கையில் வரைந்து வைத்தேன் கண்ணே
என் கண்ணின் மணியும் நீயே
நான் உன்னை மறப்பதில்லை
நீ எந்தன் செல்லப் பிள்ளை
உன்னை போதித்து விசாரித்து என் வழிகளில் நடக்க செய்வேன்
ஒளி சுடராய் மாற்றிடுவேனே
தாயைப் போல் உன்னைத் தேற்றி
அன்பின் ஆவியை ஊற்றி
உன்னை மரண இருளின் பள்ளத் தாக்கில் ஒளி பெறச் செய்திடுவேனே
உன்னை ஜெயமாய் நடத்திடுவேனே
உந்தன் ஆத்ம ஸ்நேகிதனாக
காப்பேன் என்றென்றுமாக
நீ கேட்டதெல்லாம் தரும் படிக்குத் துணையாய் நின்றிடுவேனே
வாழ்ந்து சுகமாய் இருக்கச் செய்வேனே