munnoru naalil bethlehemil

முன்னொரு நாளில் பெத்லகேமில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

முன்னொரு நாளில் பெத்லகேமில்
வேதவார்த்தை சொன்னபடி
மரியாளில் மைந்தன் கிறிஸ்தேசு
புவியில் பிறந்தாரே...
யூத ராஜன் பிறந்தார் தூதர்கள் பாடினர்
மானிடர்களும் ஏகிட நித்யமாய் வாழ்வாரே
சங்கீதம் தொனிக்குதே செவி சாய்த்து கேள்
பெத்லகேம் என்னும் நகரில்
கிறிஸ்தேசு பிறந்தாரே
1. மேய்ப்பர்கள் விண்ணில் கண்டாரே
பிரகாச நட்சத்திரம்
அப்போது தூதர் பாடிடும் பாடல்
வானில் கேட்டாரே
அவ்வேளை கழுதையின் மேல்
மரியாளும் யோசேப்பும் இடம் தேடி
சென்றனரே எங்குமே இடமில்லையே
2. தேடலின் முடிவாய் அவர்கள்
தொழுவத்தை சேர்ந்தனர்
பனிசூழ்ந்த மை இருட்டிலே
பாலனாய் இயேசு பிறந்தார்