mudivilladhavare nal mudivai

முடிவில்லாதவரே நல் முடிவை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.

முடிவில்லாதவரே நல் முடிவை – Mudivilladhavare Nal Mudivai
முடிவில்லாதவரே
நல் முடிவை தருபவரே-2
என் விண்ணப்பத்திற்கும்
என் கண்ணீருக்கும் பதிலை அளிப்பவரே-2
புகலிடமே என் மறைவிடமே
சமாதானமே சம்பூரணமே
ஆறுதலே என் அக்களிப்பே
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்-2
1.இதுவரை நடத்தின எபினேசர் நீரே
எந்நாளும் நடத்திடுவீர்
இனிமேலும் தாங்கும் கரம் உம்முடையதே
என்றென்றும் காத்திடுமே-2-புகலிடமே
2.ஓங்கிய புயமும் அடைக்கலம் நீரே
வழுவாமல் காத்திடுவீர்
ஒருவராய் பெரிய காரியம் செய்வீர்
ஒத்தாசை அனுப்பிடுவீர்-2 -புகலிடமே
3.உன்னதமானவர் மறைவில் இருப்பதால்
வல்லவர் நிழல் தங்குவேன்
அடைக்கலம் கோட்டை நான் நம்பும் தேவன்
என்றே நான் சொல்லிடுவேன்-2-புகலிடமே