Mudivilla Raajane Lyrics

முடிவில்லா ராஜனே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மகிமை நிறைந்தவரே மகத்துவமானவரே
மாறாத எங்கள் தகப்பனே
உம்மைப் போற்றியே பணிகிறோம்
உம்மைப் போற்றி போற்றி பணிந்திடுவோம்
நிகரில்லா தேவன் நீரே
உம்மைப் போற்றி போற்றி மகிழ்ந்திடுவோம்
முடிவில்லா ராஜனே
ஒருவரும் சேரா ஒளியினில் வாசம் செய்யும்
பரிசுத்தரே மூன்றில் ஒன்றாய் ஜோலிப்பவரே
உம்மைப் போற்றியே பணிகிறோம்
ஆதியில் வார்த்தையாய் இருந்தவர்
மனுஷனாய் உலகத்தில் வந்தவர்
எங்கள் இரட்சகர் நீரே
உம்மைப் போற்றியே பணிகிறோம்
தேற்றரவாளன் நீரே நீர் இருக்கிற இடத்தில்
விடுதலை எங்கள் ஆவியானவரே
உம்மைப் போற்றியே பணிகிறோம்
வானங்களில் நீர் உயர்ந்தவர்
பூமியை ஆளுகை செய்பவர்
சர்வ லோகத்தின் ஆண்டவரே
உம்மைப் போற்றியே பணிகிறோம்