1.mikuntha pavas serrile

மிகுந்த பாவச் சேற்றிலே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.மிகுந்த பாவச் சேற்றிலே
அமிழ்ந்தவன் ஆனேன்;
விஸ்தார பூதலத்திலே
சகாயத்தைக் காணேன்.
2.மா தூரமாய் எத்திக்கிலும்
போனாலும், இன்னுமே
என் தோஷம் ஆராலாகிலும்
நீங்காமல் நிற்குமே.
3.தள்ளுண்ணவே நான் பாத்திரன்;
கெட்டேன் என் பாவத்தால்;
நீரோ மகா தயாபரன்
நிறைந்தோர் அன்பினால்.
4.ஆ! யேசுவே, என் இக்கட்டில்
சகாயராய் இரும்;
தெய்வீக அன்பை நெஞ்சத்தில்
அளித்து ரட்சியும்.