migundha vallamaiyodu

மிகுந்த வல்லமையோடு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மிகுந்த வல்லமையோடு அவர் வருகிறார் -2
வாசல் அருகே அவர் வந்துவிட்டார்-2
அவரை சந்திக்க ஆயத்தமாவோமா -2
வருகிறார் இயேசு வருகிறார்
மேகங்களின் மீது வருகிறார் -2 – அவரை சந்திக்க
1.ஜெப ஆவியால் நிறைந்திருப்போம்
அக்காலத்தை நாம் அறியாததால்
திருடனைப்போல அவர் வந்திடுவார்
நம்மையும் அவரோடு அழைத்து செல்வார் -2 -வருகிறார் இயேசு
2.விழித்திருப்போம் நாம் விழித்திருப்போம்
நினையாத நேரத்தில் வந்திடுவார்
ஜெப ஆவியை நாம் தரித்துக்கொள்ளுவோம்
ஆயத்தத்தோடு அவரை சந்திப்போம் – 2 வருகிறார் இயேசு
மார நாதா சீக்கிரம் வாரும் -2
ஆயத்தமாகனுமே இன்னும் ஆயதமாகனுமே