melana paliyaka puthiya kanikkaip patal – Melana Baliyaga

மேலான பலியாக புதிய காணிக்கைப் பாடல்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs and Roman Catholic Songs collection.

மேலான பலியாக புதிய காணிக்கைப் பாடல் – Melana Baliyaga
மேலான பலியாக எதை நான் தருவேன்
இறைவா எனைத் தந்தேன் உமக்காக
உயிர் தந்த மேன்மைக்கு
உயிர்த்தெழுந்த புதுமைக்கு
எனை நான் தந்தேன் உமக்காக…ஆ….
கல்வாரி மலையிலே கலங்கரை தீபமாய்
சுடர்ந்த என் இயேசுவே உமக்காக
அன்பான அன்னையை வாழும் உலகிற்கு
பகிர்ந்த எம் தெய்வமே உமக்காக
ஒரு முடிவெடுத்தேன்
மனம் திறந்து வைத்தேன்
இறைவா இறைவா உமக்காக…ஆ…
ஆற்றலும் வலிமையும் ஆழ்மனம் ஊட்டிடும்
வார்த்தையின் தெய்வமே உமக்காக
திருவுடல் உணவென
குருதியைக் கொடையென
பொழிந்த நல் இயேசுவே உமக்காக
என் காலமெல்லாம் இசை பாடிடுவேன்
இறைவா இறைவா உமக்காக