Mega Meethinil Vegamudan

மேகமீதினில் வேகமுடன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மேகமீதினில் வேகமுடன் – Megameethinil Vegamudan
மேகமீதினில் வேகமுடன்
மேசியா இயேசுவே வந்திடுவார்
மேகமீதினில் வேகமுடன்
மேசியா இயேசுவே வந்திடுவார்
மின்னலைப் போன்ற பேரொளியில்
மத்திய வானில் தோன்றிடுவார்
எண்ணிலடங்கா பக்தர்களும்
விண் தூதர் சேனை சூழ்ந்திடவே
மேகமீதினில் வேகமுடன்
மேசியா இயேசுவே வந்திடுவார்
மேகமீதினில் வேகமுடன்
மேசியா இயேசுவே வந்திடுவார்
தாமதம் ஏனோ தம் வருகை
தீவிரம் வந்தால் நம் நிலைமை
காதில்(காகள) சத்தம் கேட்டிடுமோ
கர்த்தரைக் காண ஆயத்தமா
காதில்(காகள) சத்தம் கேட்டிடுமோ
கர்த்தரைக் காண ஆயத்தமா
மேகமீதினில் வேகமுடன்
மேசியா இயேசுவே வந்திடுவார்
மேகமீதினில் வேகமுடன்
மேசியா இயேசுவே வந்திடுவார்
இந்த கடைசி காலத்திலே
இப்புவி இன்பம் தள்ளிடுவோம்
பாரங்கள் யாவும் நீக்கிடுவோம்
பேரின்ப இராஜ்யம் சேர்ந்திடுவோம்
மேகமீதினில் வேகமுடன்
மேசியா இயேசுவே வந்திடுவார்
மேகமீதினில் வேகமுடன்
மேசியா இயேசுவே வந்திடுவார்