meetpar iyesuvin namaththil izhanthavai

மீட்பர் இயேசுவின் நாமத்தில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மீட்பர் இயேசுவின் நாமத்தில் இழந்தவை
எல்லாம் நான் திருப்பி கொள்ளுவேன் -2
சிறிதானாலும் பெரிதானாலும்
இயேசுவின் நாமத்தினால் திருப்பி கொள்ளுவேன் – 2
1. பாவங்கள் போக்குவார்
வியாதியெல்லாம் நீக்குவார்
ஜீவன் அழியாமல் பாதுகாப்பார் – 2
கழுகுக்கு சமானமாய் திரும்ப
என் வயது வால வயது போலாகிறது – 2 ( சிறிதானாலும் )
2. களங்கள் தானியத்தால் நிரம்பிட செய்திடுவார்
இனியும் வெட்கப்பட்டு போவதில்லை – 2
பட்சித்த வருஷங்களின் விளைவை
தேவனால் திரும்ப பெற்று கொள்ளுவேன் – 2 ( சிறிதானாலும் )
3. எனது கூடாரத்தை மகிழ்வால் நிரப்புவார்
தவிப்பும் சஞ்சலமும் ஓடி போகுமே -2
இடிந்த என் வாழ்வை கட்டி எழுப்புவார்
முன் போன்ற நிலை பெறுமே – 2 ( சிறிதானாலும் )