Meetpadai Thamatham Seiyathae

மீட்படை தாமதம் செய்யாதே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

பல்லவி
மீட்படை தாமதம் செய்யாதே
மீட்படை இன்றே!
சரணங்கள்
1. மீட்பர் உன்னை இன்று ஆவலாய்த் தேடுகிறார்!
மாட்டேனென்று சொல்லிப் போய்விடாதே – மீட்படை
2. பாதகங்கள் மிக்க மிக்கவே செய்த நான்
நாதரேசு பாதம் சென்றேன்; மீட்டார் – மீட்படை
3. பாவி பாவி பாவி என்றுனை எண்ணினால்;
ஆவல் கொண்டு தாவித்தேடு, மீட்பார் – மீட்படை
4. நாளைக் காகட்டென்று எண்ணி நீ தள்ளிடாய்;
நாளை என்பதுந்தன் நாளோ? வா! வா! – மீட்படை
5. வந்தால் மீட்பருன்னை அன்புடன் தாங்குவார்
இந்த நல்ல ஈவைத் தேடு இன்றே – மீட்படை