mayaiyum verumaiyum aanathe

மாயையும் வெறுமையும் ஆனதே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மாயையும் வெறுமையும் ஆனதே
என் வாழ்க்கை நிரந்தரம் அற்றதே – 2
வானத்தின் கீழ் காணும் யாவுமே
பார்வைக்கு தவறாய் தோன்றுதே – 2
உம் பார்வை விட்டு சென்ற நிமிடங்கள்
உம் அன்பை மறந்து போன நொடிகள் – 2
வலிகளும் வேதனையும் என் துணையானதே
மனிதனின் அன்பும் சிநேகமும் சாரமற்றதே – 2
எந்தன் நில அறிந்தும் என்னை புரிந்தும் தேடி வந்தவரே
சிதறின என் இதயத்தை உன் கரத்தால் வணைந்தீரே – 2
என் வாழ்வில் நீர் வந்த நேரம்
உம் அன்பை நானும் கொஞ்சம் ரசித்தேன் – 2
என் பாடுகள் தூசி போல் சிதறி சென்றதே
உம் துணை மட்டும் என் வாழ்வில் நிரந்தரமானதே